1.
எந்தன் உள்ளம் புதுக்கவியாலே பொங்க
இயேசுவைப் பாடிடுவேன்
அவர் நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்
அவரையே நேசிக்கிறேன்
அல்லேலுயா துதி அல்லேலுயா – எந்தன்
அண்ணலாம் இயேசுவைப் பாடிடுவேன்
இத்தனை கிருபைகள் நித்தமும் அருளிய
கர்த்தனைக் கொண்டாடுவேன்
2.
சென்ற காலம் முழுவதும் காத்தாரே ஓர்
சேதமும் அணுகாமல்
சொந்தமாக ஆசீர் பொழிந்தெனக்கென்றும்
சுகபெலன் அளித்தாரே – அல்லேலுயா
3.
சில வேளை இமைப்பொழுது தன் முகத்தை
சிரு்டிகர் மறைத்தாரே
கடுங்கோபம் நீக்கித் திரும்பவும் என்மேல்
கிருபையும் பொழிந்தாரே – அல்லேலுயா
4.
பஞ்ச காலம் பெருகிட நேர்ந்தாலும் – தாம்
தஞ்சமே ஆனாரே
அங்கும் இங்கும் நோய்கள் பரவி வந்தாலும்
அடைக்கலம் அளித்தாரே – அல்லேலுயா
5.
களிப்போடு விரைந்தெம்மைச் சேர்த்திட – என்
கர்த்தரே வருவாரே
ஆவலோடு நாமும் வானத்தை நோக்கி
அனுதினம் காத்திருப்போம் – அல்லேலுயா
1.
enthdhan ullam buthukkaviyale pongka
iyesuvaib badiduven
avar namam uurrunda parimala thailam
avaraiye nesikkiren
alleluya thuthi alleluya – enthdhan
annalam iyesuvaib badiduven
ithdhanai kirubaikal nithdhamum aruliya
karthdhanaika kondaduven
2.
sendra kalam muzhuvathum kaththare oor
sedhamum anukamal
sonthdhamaka aaseer pozhinththenakkenrum
sukabelan alithare – alleluya
3.
sila velai imaippozhuthu dhan mukaththai
sirishtikar maraiththare
kadungkopam neekith thirumpavum enmel
kirubaiyum pozhinthare – alleluya
4.
panja kalam perukita nernththalum – tham
dhanjchame aanare
angkum ingkum noykal paravi vanththalum
adaikkalam aliththare – alleluya
5.
kalippodu virainththemmais serththita – en
karthdhare varuvare
aavalodu namum vanaththai nokki
anuthinam kaththiruppom – alleluya